Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 894)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ஹம்ஸ ச்ரேணீ பரிசித கதி: ஹாரிணீ கல்மஷாணாம் மௌளௌ சம்போ: ஸ்திதிம் அதிகதா முக்த சந்த்ர அநுபத்தா ராஜ்ஞாம் ஏகா ரகுகுல புவாம் ஸம்யக் உத்தாரிகா த்வம் காலே தஸ்மிந் க்ஷிதிம் அதிகதா பாதுகே ஜாஹ்நவீவ
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அன்னப் பறவைகள் போன்ற ஸாதுக்களால் வணங்கப்பட்ட ஸஞ்சாரம் கொண்டுள்ளாய். அனைத்துவிதமான பாவங்களையும் நீக்குகிறாய். சிவனுடைய தலையில் அமர்கின்ற இருப்பை அடைந்தாய். அழகான தங்கத்துடன் கூடியவளாக உள்ளாய். ரகுகுலத்தின் அரசர்கள் அனைவரையும், வேறு எந்தத் துணையும் இல்லாமல் கரை ஏற்றி, உயர்ந்த கதி அளித்தாய். இப்படியாக நீ கங்கையைப் போன்று இந்தப் பூமியை அடைந்தாய்
கங்கையில் அன்னங்கள் உலவும்; ஸஞ்சாரம் என்பது கங்கையில் ப்ரவாஹம்; சிவனின் தலையில் கங்கையும் உள்ளது; பாவங்கள் நீக்குதல் கங்கைக்கும் இயல்பு.