Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 893)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

அவிகல நிஜ சந்த்ராலோக ஸந்தர்சநீயா ப்ரதிகலம் உபபோக்யா பாதுகே ரங்கபர்த்து: முகுளயிதும் அசேஷம் மௌக்திக ஜ்யோத்ஸ்நயா ந: ப்ரபவஸி திமிரௌகம் பெர்ணமாஸீ நிசேவ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தோஷங்கள் இல்லாத தூய்மையான தங்கத்தால் இழைக்கப்பட்டு (பூர்ணமான சந்த்ரனின் ஒளியால்) நீ மிகவும் அழகாக உள்ளாய். ஒவ்வொரு நொடியிலும் (சந்த்ரனின் கலையிலும்) நீ அனுபவிக்கத்தக்கவளாக உள்ளாய். உனது முத்துக்களின் ஒளி என்ற நிலவு மூலமாக நீ பௌர்ணமி ராத்திரி போன்று நின்று, எங்கள் அறியாமை என்ற இருளை ஒழிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்றுள்ளாய்.