Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 892)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
மநஸி நியம யுக்தே வர்த்தமாநா முநீநாம் ப்ரதிபதம் உபயாந்தீ பாவநீய க்ரமத்வம் ச்ருதிரிவ நிஜசப்தை: பாதுகே ரங்கபர்த்து: பதம் அநிதர கம்யம் வ்யங்க்தும் அர்ஹா த்வமேவ
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தெய்வபக்தி, ஆசார்யபக்தி, ஸத்யம், காமக்ரோதம் இல்லாமை, பொறாமை இல்லாமை போன்ற பலவிதமான தன்மைகளுடன் உள்ள முனிவர்களின் மனதில் நீ உள்ளாய். உன்னுடைய ஒவ்வொரு அடியிலும் (பதத்திலும்) கவனிக்கத்தக்க நடையைக் (பொருளை) கொண்டுள்ளாய். இப்படியாக நீ ச்ருதி போன்று இனிமையான சொற்களை உனது நாதங்களால் வெளிப்படுத்துகிறாய். வேறு எதனாலும் விளக்க இயலாத திருவரங்கனின் திருவடிகளை நீயே விளக்கும் தகுதி பெற்றவளாக உள்ளாய்.