Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 891)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

த்வரிதம் உபகதாநாம் ஸ்ரீமதோ ரங்கபர்த்து: த்வத் உபஹித பதஸ்ய ஸ்வைர யாத்ரோத்ஸவேஷு முகயதி திகந்தாந் முஹ்யதாம் த்வத் ப்ரசஸ்தௌ விஹிதகுஸும வ்ருஷ்டி: வ்யாவகோஷீ ஸுராணாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட திருவடிகளுடன் புறப்படுகின்ற ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியவனான ஸ்ரீரங்கநாதன் தனது விருப்பப்படி, எந்தவிதமான தடையும் இன்றி வெகுவேகமாக ஸஞ்சாரம் செய்கிறான். அப்போது உன்னைத் துதிக்கவேண்டும் என்ற மயக்கத்தில் நின்ற தேவர்கள், உன் மீது மலர்கள் தூவி, ஒருவரை ஒருவர் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர். இந்த ஒலியானது அனைத்துத் திசைகளையும் எதிரொலிக்கச் செய்கிறது.