Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 890)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
அநுபதி பரிரக்ஷந் ஏக புத்ர அபிமாநாத் புவநம் இதம் அசேஷம் பாதுகே ரங்கநாத: நிஹ பத நிஹிதாயாம் தேவி திஷ்டந் வ்ரஜந் வா த்வயி நிஹித பரோ அபூத் கிம் புந: ஸ்வாபம் ருச்சந்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒரு புத்திரன் மட்டுமே இருந்தால் அவனிடம் பெற்றவர்களுக்கு எத்தனை ப்ரியம் இருக்குமோ அது போன்று அனைத்து லோகங்களையும் ப்ரியமாகக் காப்பாற்றியபடி ஸ்ரீரங்கநாதன் உள்ளான். அவன் நிற்கும்போதும், நடக்கும்போதும் தனது ராஜ்ய பாரத்தைத் திருவடியில் உள்ள உன் மீது வைக்கிறான். அவன் உறங்கும்போதும் இப்படி செய்வதைக் கூறவும் வேண்டுமோ?