Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 889)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
சரிதநிகில வ்ருத்தி: சாருபத்மாஸநஸ்தா குணநிபிடித முக்தா பங்க்தி பத்தாக்ஷமலா ஸலிதம் அதிவஸந்தீ பாதுகே ரங்கபர்த்து: சரண கமலமந்தர் பிம்பிதம் த்யாயஸீவ
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸஞ்சாரம் என்னும் அன்றாட கர்மங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு, தாமரை மலர் போன்ற ஆஸனத்தில் (பாதபீடம்) நீ பத்மாஸன நிலையில் அமர்ந்து கொள்கிறாய். உயர்ந்த குணங்கள் என்னும் நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களின் வரிசையாலாகிய ஜபமாலையை அணிந்து கொள்கிறாய். ஸ்ரீரங்கநாதனுக்கு மிகவும் அருகில் அமர்ந்து கொண்டு, உன்னுள்ளே பிரதிபலிக்கும் அவனது திருவடித் தாமரைகளைத் த்யானித்தபடி உள்ளாய்.