Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 888)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

பரிணத குண ஜாலா பங்க்திபி: மௌக்திகாநாம் பஹுவிதமணி ரச்மி க்ரந்தி பந்தாபிராமா ரகுபதி பதரக்ஷே ராஜவாஹ்யஸ்ய கும்பே கலிதருசி: அபு: த்வம் காபி நக்ஷத்ரமாலா

ரகுவம்சத்தின் அதிபதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் வரிசையானது சரடுகள் போன்றும், அந்த முத்துக்களின் இடையே போடப்பட்ட முடிச்சுகள் போன்று உனது இரத்தினக்கற்களும் உள்ளன. இவை உனது இரத்தினக்கற்களில் இருந்து வெளிப்படும் ஒளி என்னும் கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ளன. இப்படியாக ரகுவம்சத்தின் அரசர்களுடைய சத்ருஞ்ஜயம் என்ற பட்டத்து யானையின் தலையில் ப்ரகாசமுடன் உள்ள (இருபத்தேமு முத்துக்களால் கோர்க்கப்பட்ட) நக்ஷத்ர மாலையாக உள்ளாய்.