Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 887)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

விரசித நவ பாகா ரத்நபேதை: விசித்ரை: விவித விததரேகா வ்யக்தி ஸீமாவிபாகா ஹரி சரண ஸரோஜம் ப்ரேப்ஸதாம் அர்ச்சநீயம் ப்ரதயஸி நவநாபம் மண்டலம் பாதுகே த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பலவிதமான இரத்தினக்கற்களால் ஒன்பது பாகங்கள் உள்ளவளாக நீ ஆக்கப்பட்டாய். உனது பலவிதமான ரேகைகள் காரணமாக அந்த ஒன்பது பாகங்களும் ஒன்பது எல்லைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை அடைய விரும்புபவர்களால் வணங்கத்தக்கதான ஒன்பது நாபி கொண்டதால், நவநாபம் என்ற பெயர் கொண்ட மண்டலத்தை நீ ப்ரகாசப்படுத்துகிறாய்.

முக்தியை அடைய விரும்புபவர்கள் நவநாபம் என்ற மண்டலத்தை ஆராதிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த மண்டலத்தில் ஒன்பது சக்கரங்கள் காணப்படும். இதனைப் பாதுகைக்கு ஒப்பாகக் கூறுகிறார்.