Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 886)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ப்ரணிஹித பதபத்மா பாதுகே ரங்கபர்த்து: சுபதர கதிஹேது: சாரு முக்தா ப்ரவாளா ஸ்திர பரிணத ராகாம் சுத்த போத அநுபத்தாம் ஸ்வஜநயஸி முநீநாம் த்வந்மயீம் சித்தவ்ருத்திம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது ஸ்ரீரங்கநாதனின் தாமரை மலர் போன்ற திருவடிகள் எப்போதும் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கநாதனின் உல்லாஸமான ஸஞ்சாரத்திற்குக் காரணமாக (ஜீவன்கள் மோக்ஷத்தை அடையும் கதிக்கு காரணமாக) நீ உள்ளாய். அழகான முத்துக்கள், பவழங்கள் கொண்டுள்ளாய் (முக்தி பெற்ற ஜீவன்களைக் கொண்டுள்ளாய்). உறுதியான சிவந்த நிறம் கொண்டுள்ளாய் (உறுதியான பகவான் விஷயத்தில் மட்டுமே ஆசை). தூய்மையான ஞானம் கொண்டு, உன்னை மட்டுமே பற்றி நிற்கின்ற பரதன் முதலானவர்களின் பக்திபோன்ற ஞானத்தை உன் வசப்படுத்தியுள்ளாய்.