Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 885)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

கநக ருசிர காந்தி: கல்பித அசோகபாரா க்ருத பதகமல ஸ்ரீ: க்ரீடதா மாதவேந திசி திசி ஸுமநோபி: தர்சநீய அநுபாவா ஸுரபி ஸமயலக்ஷ்மீம் பாதுகே புஷ்யஸி த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய தங்கம் காரணமாக சண்பக மரம் போன்று அழகாக உள்ளாய். உன்னை அடைந்தவர்களின் துன்பங்களை நீக்குவதால், அசோக மரம் போன்று உள்ளாய் (அசோக = அ + சோக = சோகம் அற்ற). இனிமையுடன் விளையாடியபடி ஸ்ரீரங்கநாதனால் தனது திருவடிகளில் வைக்கப்பட்டுள்ளாய் (மாதவ என்ற பதம் ஸ்ரீரங்கநாதனையும், வைகாஸி மாதத்தையும் குறிக்கும்; திருவடிகள் என்பது தாமரையைக் குறிக்கும்). அனைத்துத் திசைகளிலும் உள்ள தேவர்கள் உன்னை வணங்கும்படியாகப் பெருமை கொண்டாய் (தேவர்கள் = பலவிதமான மலர்கள்). இப்படியாக நீ வஸந்த காலத்தின் எழிலை அடைந்தாய்.