Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 884)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ஹரிசரணம் உபக்நம் பாதுகே ஸம்ச்ரிதாயாம் அதிகத பஹுசாகம் வைபவம் தர்சயந்த்யாம் அபஜத விதிஹஸ்த ந்யஸ்த தர்மத்ரவாயாம் த்வயி முகுள ஸம்ருத்திம் மௌக்திக ஸ்ரீஸ்ததாநீம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமனாக நின்றபோது அவனது திருவடியை நீ படர்கின்ற கொழுகொம்பாகப் பற்றினாய். அந்தக் கொடியானது வேத சாகைகள் என்னும் பலவிதமான கிளைகளை அடைந்து பெருமை பெற்றது. அந்தக் கொடிக்கு நான்முகன் தனது கைகளால் தர்மம் என்ற நீரை விட்டான். அந்த நீர் காரணமாக, அந்தக் கொடியில் தோன்றிய மொட்டுகள் போன்று உனது முத்துக்கள் காணப்படுகின்றன.