Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 883)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ரகுபதி ஸங்காத் ராஜ்யகேதம் த்யஜந்தீ புநரபி பவதீ ஸ்வாந் தர்சயந்தீ விஹாராந் அபிஸமதித வ்ருத்திம் ஹர்ஷ கோலாஹலாநாம் ஜநபத ஜநிதாநாம் ஜ்யாயஸா சிஞ்ஜிதேந

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளில் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சேர்ந்ததால், அதுவரை ராஜ்ய பாரம் காரணமாக உண்டான துயரங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் நீ விட்டாய். மீண்டும் உனது உல்லாஸமான ஸஞ்சாரங்களைக் காட்டியபடி, இனிமையான நாதத்தால், அயோத்தியில் உண்டான இனிமையான சந்தோஷக் கூச்சல்களை மேலும் வளர்த்தாய்.