Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 882)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ச்ருதி விஷய குணா த்வம் பாதுகே தைத்ய ஹந்து: ஸதத கதி மநோஜ்ஞா ஸ்வேந தாம்நா ஜ்வலந்தி ஜதித புவந வ்ருத்தி: த்ருச்யஸே ஸ்தைர்ய யுக்தா வித்ருத நிகிலபூதா வைஜயந்தீவ மாலா

அசுரர்களை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது நாதம் எப்போதும் காதுகளுக்கு விஷயமாக உள்ளது (ஓசை = ஆகாயம்); எப்போதும் செய்யும் ஸஞ்சாரம் காரணமாக அழகாக உள்ளாய் (எப்போதும் ஸஞ்சாரம் செய்வது காற்று = வாயு); உன்னுடைய தேஜஸ் கரணமாக எப்போதும் ப்ரகாசமாக உள்ளாய் (அக்னி); உலகங்களை எப்போது வளரச் செய்கிறாய் (வளர்ப்பது = தண்ணீர்); என்றும் ஸ்திரமாக உள்ளாய் (ஸ்திரம் = பூமி). இப்படியாக உள்ள நீ, பஞ்சபூதங்களைத் தன்னுள் தரித்துள்ள வைஜயந்தீ என்னும் ஸ்ரீரங்கநாதனின் மாலை போன்றே உள்ளாய்.