Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 881)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
மணிநிகர ஸமுக்தை: ஸர்வவர்ணா மயூகை: ப்ரகடித சுபநாதா பாதுகே ரங்கபர்த்து: நிகில நிகமஸூதே: ப்ரஹ்மண: தத் ஸநாதாம் அவகமயஸி ஹ்ருத்யாம் அர்த்த மாத்ராம் சதுர்த்தீம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்திக்கற்களின் குவியல் மூலமாக ஏற்பட்ட ஒளியாலும் ஒலியாலும், நீ பலவிதமான வர்ணங்கள் கொண்டவளாகவும், இனிமையான நாதம் உடையவளாகவும் இருக்கிறாய். அனைத்து வேதங்களுக்கும் காரணமாக உள்ள வேதமாகவே இருக்கிற ப்ரணவத்தின், ஸ்ரீரங்கநாதனுடன் கூடிய ஹ்ருதயத்தில் இருக்கிற நான்காவதான அரைமாத்ரையாக நீ உள்ளாய்.
ப்ரணவத்தில் உள்ள மூன்று எழுத்துக்கள் அ, உ, ம என்பதாகும். இவை தவிர நான்காவதாக அரைமாத்திரை என்ற ஒன்று ப்ரணவத்தில் உள்ளது. இது போன்று பாதுகை உள்ளதாகக் கூறுகிறார். அரைமாத்திரையாகவே இருந்தாலும் அனைத்து எழுத்துக்களையும் உள்ளடக்கியது என்பதைப் பலவிதமான வர்ணங்கள் கொண்டவள் என்று கூறுகிறார். அந்த அரை மாத்திரையே மிகவும் இனிமையாக உள்ளது என்பதை இவளது நாதம் என்றார்.