Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 880)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
நந்தஸூநு பதபத்மம் இந்திரா பாணி பல்லவ நிபீட நாஸஹம் பாதுகே தவ பலேந பர்யபூத் ஊஷ்மளாம் உரக மௌளி சர்க்கராம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கண்ணனின் திருவடிகள் மஹாலக்ஷ்மியின் திருக்கரங்களால் வருடப்படுவதைக்கூட பொறுக்க இயலாதபடி மென்மையானவை ஆகும். ஆனால் அந்தத் திருவடிகள் உன்னுடைய பலம் காரணமாகவே, சுடும்படியாக இருந்த காளியனின் தலைகள் என்ற கடினமான இடத்தில் மிதித்தபடி ஆடி, அந்தத் தலைகளைத் தலைகுனியும்படிச் செய்தன.