Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 879)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ஸாதயந்தி மதுவைரி பாதுகே ஸாதவ: ஸ்திரம் உபாயம் அந்திமம் த்வத் ப்ரவ்ருத்தி விநிவர்த்தந உசித ஸ்வப்ரவ்ருதி விநிவர்த்தந அந்விதம்
மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பெரியவர்கள் செய்வது என்னவென்றால் – நீ அவர்களைக் காப்பாற்றவிடாமல் தடுக்கின்ற செயலான “தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முயலுதல்” என்பதைச் செய்யாமல் இருந்து விடுகின்றனர் (ஆகவே அவர்களைக் காக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கின்றனர்). மேலும் அழிவற்ற பலத்தை (மோக்ஷம்) அளிக்கவல்ல, இறுதியான, சரணாகதி வடிவமான மோக்ஷ உபாயத்தையும் கடைபிடிக்கின்றனர்.