Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 878)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
பங்கஜா ஸஹசரஸ்ய ரங்கிண: பாதுகே நிஜபதாத் அநந்தரம் ந்யஸ்த: த்வயி ஜகந்தி ஜாயதே நாகபோகசயநம் நிரங்குஸம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தனது ஸஞ்சார காலம் முடிந்தவுடன் ஸ்ரீரங்கநாதன் தன்னுடைய திருவடிகளால் காக்கப்பட்டு வந்த உலகங்களை உன்னிடம் வைக்கிறான். இதனால்தான், ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடிய ஸ்ரீரங்கநாதனால் ஆதிசேஷன் மீது சயனித்தபடி உறங்குவதற்கு எந்தத் தடையும் இல்லாமல் உள்ளது (அனைத்தையும் நீ பார்த்துக் கொள்கிறாய் என்பதால் கவலை இன்றி அரங்கன் உறங்குகிறான் என்று கருத்து).