Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 877)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

கோமள அங்குளி நிவேச யந்த்ரிகா ந்யஸ்த மௌக்திக மயூக தந்துரா மங்களாநி வமஸீவ தேஹிநாம் ரங்கராஜ மணிபாதுகே ஸ்வயம்

ஸ்ரீரங்கராஜனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் மென்மையான அழகான திருவடி விரல்கள் பிடித்துக் கொள்வதற்கு ஏற்றபடி உனது குமிழ்களின் மீது முத்துக்கள் இழைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒளி மூலமாக நீ உலகில் உள்ளவர்களுக்கு ஏற்ற நன்மையைக் கக்குகிறாய்.