Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 876)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

உந்நதம் பலிவிரோதிந: ததா பாதுகே பதசரோஜம் ஆச்ரிதா மௌக்திக ஸ்தபக மத்ய ஸம்மிதம் வ்யோம ஷட்பததுலம் அலம்பய:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மஹாபலியை அடக்கியபோது ஸ்ரீரங்கநாதன் தனது தாமரை மலர் போன்ற திருவடியை மேல் நோக்கு உயர்த்தினான். அப்போது உன்னுடைய முத்துக்கள் அனைத்தாலும் மேல்புறத்தில் மலர்கொத்துக்கள் போன்ற தோற்றம் உண்டாக்கினாய். ஆங்காங்கு காணப்பட்ட ஆகாயம், அந்த மலர்க்கொத்தில் அமர்ந்த வண்டு போன்று இருந்தது.