Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 875)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
பத்ரளா மணிகணை: ஹிரண்மயீ பாஸி ரங்கபதி ரத்ந பாதுகே கேளி மண்டப கதாகத உசிதா பூமிகேவ கருடேந கல்பிதா
ஸ்ரீரங்கநாதனின் இரத்தினமயமான பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளியானது சிறகுகள் போன்று உள்ளது. நீ தங்கமயமாக உள்ளாய். இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் விளையாட்டு மண்டபத்திற்கு எளிதாகச் சென்று வரும்படியாக கருடனே ஏற்படுத்திய ரூபம் போன்று விளங்குகிறாய்.