Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 874)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ஆக்ராந்தவேதி: பவதீ ததாநீம் அதர்சி முக்தாந்வித சோணரத்நா கரக்ரஹார்த்தம் பரதேந பூம்யா: லாஜோத்கரை: வஹ்நிசிகேவ கீர்ணா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய ஸிம்ஹாஸனமானது யாகம் செய்யவல்ல வேதி போன்று உள்ளது. அதன் மீது உள்ள அக்னி போன்று உனது பத்மராகக்கற்கள் உள்ளன. அந்த அக்னியில் இடப்பட்ட பொரி போன்று உனது முத்துக்கள் உள்ளன. இப்பாடியாக இராமன் கானகம் சென்றபோது, பரதன் பூமி என்ற பெண்ணை மணம் முடித்து, அங்கு பொரிகள் தூவப்பட்ட அக்னி உள்ளதாகக் காண்பிக்கிறாய்.