Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 873)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

கரை: உதக்ரை: ஸ்புரதாம் மணீநாம் மஞ்ஜுஸ்வநா மாதவ பாதுகே த்வம் அநூபதேசே கநகாபகாயா: கலே: ப்ரவேசம் ப்ரதிஷேதஸீவ

ஸ்ரீரங்கநாச்சியரைத் தரித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியின் தீவு போன்று உள்ள ஸ்ரீரங்கத்தில், கலிகாலத்தின் ப்ரவேசத்தை நீ தடுக்கிறாய். எப்படி என்றால் - உனது இரத்தினக்கற்களின் ஒளி என்ற கைகள் கொண்டும், உனது நாதங்கள் மூலம், “உள்ளே வராதே”, என்று அதட்டியும் தடுக்கிறாய்.