Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 872)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
பச்யந்தி ரங்கேச்வர பாதரக்ஷே பூஜாஸு தே ஸம்ஹித புஷ்பஜாலாம் ம்ருகீத்ருச: வாஸவ ரத்ந ரேகாம் ஸசித்ரபுங்காம் இவ மன்மத ஜ்யாம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!ஸ்ரீரங்கநாதனுக்கு அர்ச்சனை செய்யப்படும் நேரத்தில் இடப்பட்ட மலர்களுடன் உனது இந்த்ரநீலக் கற்கள் சேர்ந்து ஒளிர்கின்றன. அவற்றை மான் போன்ற விழி கொண்ட பெண்கள் காணும்போது, அம்புகளுடன் கூடியதான மன்மதனின் வில்லில் கட்டப்பட்ட நாண் கயிறு என்றே எண்ணுகிறார்கள்.