Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 871)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ஸ்திரா ஸ்வபாவாந் மணிபாதுகே த்வம் ஸர்வம்ஸஹா ஸ்வாது பலப்ரஸூதி: ப்ருத்வீவ பத்ப்யாம் பரமஸ்ய பும்ஸ: ஸம்ஸ்ருஜ்யஸே தேவி விபஜ்யஸே ச

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது ஸ்வபாவத்தினால் நீ ஸ்திரமாகவும், அனைத்தையும் பொறுத்துக் கொள்பவளாகவும், அனைத்து பலன்களையும் உண்டாக்குபவளாகவும் உள்ளாய். இப்படியாக நீ பூமாதேவி போன்று உள்ளாய். மேலும் பூமியானது எவ்விதம் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இருந்து பிரிக்கப்பட்டும் (ஸ்ருஷ்டி காலம்), சேர்க்கப்பட்டும் (ப்ரளயகாலம்) செய்யப்படுகிறதோ, அது போன்றே நீயும் அவன் திருவடிகளுடன் சேர்ந்தும் (ஸஞ்சார காலம்), பிரிந்தும் (ஸஞ்சாரம் அல்லாத காலம்) உள்ளாய்.