Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 870)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
விசித்ரவர்ணா ச்ருதிரம்ய சப்தா நிஷேவ்யஸே நாகஸதாம் சிரோபி: மதுத்விஷ: த்வம் மணிபாதரக்ஷே ச்ரேயஸ்கரீ சாசந பத்ரிகேவ
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது பலவிதமான கற்களின் ஒளியானது, பல எழுத்துக்கள் போன்று உள்ளன. உனது செவிக்கினிய நாதங்கள் அழகான சொற்கள் போன்று உள்ளது. இப்படியாக உள்ள நீ, அனைவருக்கும் நன்மை அளிப்பவளாக, தேவர்களின் தலைகளில் ஸ்ரீரங்கநாதனின் கட்டளைச் சீட்டுகள் போன்று உள்ளாய்.