Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 869)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
சுபப்ரணாதா பவதீ ச்ருதீநாம் கண்டேஷு வைகுண்ட பதிம் வராணாம் பத்நாஸி நூநம் மணிபாதரக்ஷே மங்கள்யஸூத்ரம் மணிரச்மிஜாலை:
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் என்னும் கணவனை அடைகின்ற வேதங்களின் கழுத்தில், உனது இரத்தினக்கற்களின் ஒளி மூலமாக நீ திருமாங்கல்யத்தை அணிவிக்கிறாய் போலும். இந்த நேரத்தில் உனது இனிமையான நாதங்கள் மங்கள வாத்தியங்களாக உள்ளன.