Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 868)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ரத்ந ஆஸநே ராகவ பாதரக்ஷே ப்ரதீப்யமாநா: தவ பத்மராகா: ப்ராயோ நரேந்த்ராந் பரதஸ்ய ஜேது: ப்ரதாப வஹ்நே: அபவந் ப்ரரோஹா:

ஸ்ரீராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய ஸிம்ஹாஸனத்தில் உனது பத்மராகக் கற்கள் மிகவும் ப்ரகாசத்துடன் காணப்படுகின்றன. இவற்றைக் காணும்போது, எதிரிகளை வெல்பவனாகிய பரதனின் வீரம் என்ற நெருப்புக்கு முளைகளாகத் தோன்றுகின்றன.