Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 867)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ப்ராப்த அபிஷேகா மணிபாதுகே த்வம் ப்ரதீப்த ரத்நா ரகுராஜதாந்யா: ப்ரதக்ஷிண ப்ரக்ரமணாத் அகார்ஷீ: ப்ராகாரம் ஆக்நேயம் இவ ப்ரபாபி:
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! பட்டாபிஷேகம் செய்யப்பட்டதால் மிகவும் ப்ரகாசமாக உனது இரத்தினக்கற்கள் உள்ளன. இத்துடன் கூடியபடி நீ அயோத்தி மாநகர வீதிகளில் வலம் வருகிறாய். அப்போது உனது இரத்தினக்கற்களின் ஒளி மூலமாகவே அக்னியால் செய்யப்பட்ட மதிள் சுவரை அமைத்தாய் போலும்.