Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 866)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
பர்யாப்த மௌக்திக நகா ஸ்புட பத்மராகா ரேகாவிசேஷ ருசிரா லளிதப்ரசாரா ரங்காதிராஜ பதயோ: மணிபாதுகே த்வம் ஸாயுஜ்யம் ஆச்ரிதவதீவ ஸமஸ்த வந்த்யா
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய முத்துக்களானவை அழகான நகங்கள் போன்று உள்ளன. உனது பத்மராகக்கற்களானவை தாமரை மலர் போன்று சிவந்து காணப்படுகின்றன. மிகவும் அழகான ரேகைகள் கொண்டவளாக உள்ளாய். மிகவும் அழகான நடையைக் கொண்டவளாகவும் உள்ளாய். இப்படியாக நீ ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் மிகுந்த ஒற்றுமையை அடைந்துள்ளாய்.