Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 865)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ஆஸந்நவ்ருத்தி: அவரோதக்ருஹேஷு சௌரே: ஆபாதயஸி அநுபதம் வரவர்ணிநீநாம் ஆலக்ந ரத்நகிரணா மணிபாதுகே த்வம் மஞ்ஜுஸ்வநா மதநபாண நிகர்ஷசங்காம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அந்தப்புரங்களில் நீ உள்ளபோது, உனது இரத்தினக்கற்களின் ஒளியை எங்கும் பரவச் செய்கிறாய். உனது இனிமையான நாதம் எங்கும் ஒலித்தபடி உள்ளது. இதனைக் காணும்போது - ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடிவைப்பிலும், அவனது தேவிமார்கள் மன்மதனின் அம்புகள் தங்கள் மீது எய்யப்படுவதற்காகத் தீட்டப்படுகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுவதாகத் தோன்றுகிறது.