Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 864)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ரங்கேச்வரஸ்ய புரதோ மணிபாதுகே த்வம் ரத்நாம்சுபி: விகிரஸி ஸ்புடபக்திபந்தா பாதௌ விஹாரயிதும் அத்புத ஸௌகுமார்யௌ ப்ராய: ஸரோஜ குமுத உத்பல பத்ர பங்க்திம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அனைவரும் அறிந்த கெட்டியான இரத்தினங்களைக் (உறுதியான பக்தியை) கொண்டவளாக உள்ளாய். மென்மையான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை உல்லாஸமாக ஸஞ்சாரம் செய்விக்க நீ எண்ணினாய். இதனால் நீ செய்வது என்ன? உனது பலவிதமான இரத்தினக்கற்களின் ஒளி மூலம் தாமரை மலர், அல்லி மலர், நெய்தல் மலர் போன்றவற்றினுடைய இதழ்களின் வரிசையைப் பரப்பி வைக்கிறாய்.