Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 863)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ப்ரௌட ப்ரவாள ருசிரா புவந ஏகவந்த்யா ரங்காதிராஜ சரணாவநி ரம்ய சந்த்ரா ஸம்பிந்ந மௌக்திக ருசி: ஸததம் ப்ரஜாநாம் தாபாத்யயம் திசஸி தாரகிதேவ ஸந்த்யா
ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய பவழங்கள் மூலம் இளம் துளிர் போன்ற அழகாகச் சிவந்து காணப்படுகிறாய். அனைத்து உலகங்களாலும் வணங்கப்பட்டபடி உள்ளாய். அழகான தங்கத்தைக் (சந்த்ரனை) கொண்டுள்ளாய். உயர்ந்த முத்துக்களின் ஒளியுடன் கூடியுள்ளாய். இப்படியாக உள்ள நீ நக்ஷத்ரங்களைக் கொண்டதான ஸந்த்யா காலம் போன்று மக்களுக்கு எப்போதும் ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்கள் நீக்கி, சாந்தியை அளிக்கிறாய்.