Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 862)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
த்வம் சித்ரபாநு அஸி ரத்ந விசேஷ யோகாத் பூம்நா நிஜேந பரிபுஷ்யஸி பாவகத்வம் ஸ்வேநைவ சௌரி சரணாவநி சந்த்ரரூபா தேஜஸ் த்ரயீவ மிளிதாஸி தம: அபஹா ந:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பலவிதமான இரத்தினக்கற்கள் உன்னில் பதிக்கப்பட்டுள்ளதால் நீ வியப்பான பல வர்ணங்களுடன் கூடிய ஒளியைக் கொண்டு சூரியன் போன்று உள்ளாய். உன்னுடைய இயற்கையான தன்மை மூலம் மற்றவர்களைத் தூய்மைப்படுத்துவதால், அக்னி போன்று உள்ளாய். தங்கமயமான சந்த்ரனாகவும் உள்ளாய். இப்படியாக நீ எங்களுடைய துன்பம் என்ற இருளை நீக்கவல்ல மூன்று ஒளியாக உள்ளாய்.