Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 861)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ஆனந்தஸூ: ப்ரணயிநாம் அநகப்ரஸாதா ரங்காதிராஜ பதரக்ஷிணி ரத்நபாஸா ந்யஸ்தே முஹு: நிஜபரே ஸ்திரதாம் பஜந்த்யா: வர்ணாம்சுகம் விதரஸீவ வஸுந்தராயா:
ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னை அடைந்தவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் அளிக்கிறாய். எந்தவிதமான காரணமும் இன்றி இயல்பாகவே அனைவருக்கும் அருளுகிறாய். இந்தப் பூமியின் பாரம் உன்னிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, உறுதியுடன் நின்ற பூமிக்கு உனது இரத்தினக்கற்களின் ஒளி மூலமாக (த்ரௌபதிக்கு வஸ்த்ரம் அளித்தது போன்று), பல நிறங்கள் கொண்ட வஸ்த்ரங்களை அளிக்கிறாய் போலும்.