Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 860)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ரத்நாச்ரிதை: ஹரிபதம் மணிபாதுகே த்வம் ஸ்ப்ருஷ்ட்வா கரை: ச்ருதி ரஸாயந மஞ்ஜுநாதா தத்வம் தத் ஏதத் இதி போதயஸீவ ஸம்யக் வேதாந் ப்ரதாரிதவதோ விவிதாந் குத்ருஷ்டீந்
இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களைச் சார்ந்துள்ள ஒளி என்னும் கைகள் கொண்டு ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தொட்டு வணங்குகிறாய். செவிகளுக்கு இன்பம் உண்டாக்கும் விதமாக நாதங்கள் கொண்டுள்ளாய். வேதங்களைத் தவறாகக் கூறும் பலவிதமான வாதங்களை வைக்கின்ற வாதிகளைக் கண்டித்து, ”வேதங்கள் கூறும் உண்மையான பொருள் இவனே”, என்று ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தொட்டு உணர்த்துகிறாய் போலும்.