Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 859)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

த்வாம் ஆச்ரிதோ மணிமயூக ஸஹஸ்ர த்ருச்யாம் த்வத் சிஞ்ஜிதேந ஸஹ ரங்கபதி: ஸமுத்யந் ஆசங்க்யதே ஸுமதிபி: மணிபாதரக்ஷே வித்யாஸக: ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆயிரக்கணக்கான கிரணங்களுடன் விளங்கும் உன்னை ஸ்ரீரங்கநாதன் தனது ஸஞ்சார காலத்தில் அடைகிறான். உன்னுடைய இனிமையான நாதங்களுடன் அவன் புறப்படுகிறான். இப்படியாக உள்ள ஸ்ரீரங்கநாதன், புத்திமான்களால் மூன்று வேதங்களுடன் கூடிய சூரிய மண்டலத்தின் நடுவில் உள்ள சூரியனாகவே எண்ணப்படுகிறான்.