Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 858)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ராஜ்யே வநே அபி ரகுவீர பத உசிதாயா: ஸம்ஸ்ம்ருத்ய கௌதமவதூ பரிரக்ஷணம் தே மந்யே ஸமாஹித தியோ மணிபாதுகே த்வாம் மூர்த்நா பஜந்தி அநுதிநம் முனிதர்மதாரா:

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! அயோத்தியிலும், கானகத்திலும் இராமனின் திருவடிக்கும் பட்டத்திற்கும் ஏற்றவளாக நீ உள்ளாய். உன்னால் செய்யப்பட்ட அகலிகை ரக்ஷணம் (கௌதம முனிவரின் பத்தினியாகிய அகலிகையைக் காப்பாற்றியது) என்பதை முனிவர்களின் பத்தினிகள் எப்போதும் நினைத்தபடி உள்ளனர். இதனால் தங்கள் மனதில் வேறு எதனையும் எண்ணாமல், உன்னை அன்றாடம் தங்கள் தலையில் ஏற்று வணங்கிறார்கள்.