Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 856)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

நாதே பதாவநி ததா தவ ஸந்நிவேசே நிர்வேசந க்ரமம் அஸஹ்யம் அபாசிகீர்ஷு: யைரேவ லோசந சதை: அபிவீக்ஷதே த்வாம் தைரேவ பந்நகபதி: ச்ருதிமாந் பபூவ

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய இனிமையான நாதம், மிகவும் அழகான திருமேனி ஆகிய இரண்டையும் ஒன்றுக்குப்பின் மற்றொன்றை அனுபவிப்பது என்ற வரிசை காலதாமதத்தை ஆதிசேஷனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஆகையால் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க என்ணிய பாம்புகளின் அரசனான ஆதிசேஷன் செய்தது என்னவென்றால் – நூற்றுக்கணக்கான எந்தக் கண்களால் உன்னைக் கண்டு அனுபவிக்கிறானோ அந்தக் கண்களே காதுகளாகவும் இருக்கும்படியாக நின்றான் போலும் (பாம்புகளுக்குச் செவி இல்லை).