Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 855)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
நிர்ம்ருஷ்ட காத்ரருசிரா மணிபாதுகே த்வம் ஸ்நாதா அநுலேப ஸுரபி: நவமால்ய சித்ரா ப்ராப்தே விஹாரஸமயே பஜஸே முராரே: பாதாரவிந்த பரிபோகம் அநந்யலப்யம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நன்றாக நீராட்டப்பட்டு துடைத்துவிடப்பட்டு, மிகவும் அழகான திருமேனியுடன் காணப்படுபவளாக உள்ளாய். சந்தனப் பூச்சுடன் வாசனை நிறைந்தவனாகவும், புதிய மாலைகள் சூட்டப்பட்டவளாகவும் உள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார நேரத்தில், மற்ற யாராலும் பெற இயலாத ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளுடன் ஏற்படும் சேர்க்கை என்ற உயர்ந்த இன்பத்தைப் பெறுகிறாய்.