Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 854)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

அப்யர்ச்சிதா ஸுமநஸாம் நிவஹை: அஜஸ்ரம் முக்தா அருணோபல நக அங்குளி பல்லவஸ்ரீ: ச்ரேயஸ்கரீம் முரபித: சரணத்வயி இவ காந்திம் ஸமாச்ரயஸி காஞ்சந பாதுகே த்வம்

தங்கமயமான பாதுகையே! நீ எப்போதும் தேவர்களால் மலர்கள் தூவி பூஜிக்கப்பட்டபடி உள்ளாய். உனது முத்துக்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள் போன்று உள்ளன. உனது சிகப்புக்கற்கள் அவனது தளிர் போன்ற திருவடி விரல்கள் போன்று உள்ளன. இப்படியாக நீ ஸ்ரீரங்கநாதனின் இணைந்த திருவடிகளின் ஐச்வர்யத்தைப் பெற்றவளாக, அதன் மேன்மையைப் பெற்றவளாக உள்ளாய்.