Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 853)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ரங்காதி ராஜபதபங்கஜம் ஆச்ரயந்தீ ஹைமீ ஸ்வயம் பரிகதா ஹரி நீலரத்நை: ஸம்பாவ்யஸே ஸுக்ருதிபி: மணிபாதுகே தவம் ஸாமாந்ய மூர்த்தி: இவ ஸிந்து ஸுதா தரண்யோ:

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பற்றியவளாகவும், தங்கமயமாக இந்த்ரநீலக் கற்களால் இழைக்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய். ஆக நீ திருப்பாற்கடலில் அவதரித்த மஹாலக்ஷ்மி என்றும், பூமிபிராட்டி என்றும் புண்ணியவான்களால் எண்ணப்படுகிறாய் (தங்க நிறம் = மஹாலக்ஷ்மி, இந்த்ரநீலம் = பூதேவி).