Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 852)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
மாந்யா ஸமஸ்த ஜகதாம் மணிபங்கலீலா பாதே நிஸர்க கடிதா மணிபாதுகே த்வம் அந்த: புரேஷு லளிதாநி கதாகதாநி ச்சாயேவ ரங்கந்ருபதே: அநுவர்த்தஸே த்வம்
இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! அனைத்து உலகங்களாலும் கொண்டாடத்தக்கவளாக உள்ள நீ, உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளியால் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் நிழல் போன்று சேர்ந்துள்ளாய். இப்படியாக நீ ஸ்ரீரங்கநாதனுடன் அவனது அந்தப்புரங்களுக்கு வருவதும் போவதுமாக, அவன் நிழலாக நின்று அனுஸரிக்கிறாய்.