Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 851)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ஆத்யோ ரகுக்ஷிதிபுஜாம் அபிஷேக தீப்தை: ஆப்யாயித: தவ பதாவநி ரச்மிஜாலை: மந்தீசகார தபநோ வ்யபநீத பீதி: மந்தோதரீ வதந சந்த்ரமஸோ மயூகாந்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனக்குச் செய்யப்பட்ட பட்டாபிஷேகத்தால் உனது இரத்தினக்கற்களின் ஒளியானது வெகுவாக வீசியது. அந்த ஒளியால் ரகுகுலத்தின் முதல்வனாகிய சூரியன் மேலும் வலுவடைந்தான். இதனால் அவன் (இராவணனிடம் கொண்டிருந்த பயம் நீங்கி) இராவணனின் பத்னியாகிய மண்டோதரியின் முகம் என்ற சந்த்ரனின் ஒளி மங்கும்படிச் செய்தான்.