Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 850)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

வைடூர்ய ரம்யஸலிலா மஹிதா மருத்பி: சாயாவதீ மரதகோபல ரச்மிஜாலை: அச்ராந்தமோஹ பதவீ பதிகஸ்ய ஜந்தோ: விச்ராந்தி பூமி இவ சௌரிபாதாவநி த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது வைடூர்யக் கற்கள் தெளிவான நீரோடை போன்று உள்ளன; தேவர்கள் உன்னைக் கொண்டாடுவது என்னும் செயல் குளிர்ந்த காற்று போன்று உள்ளது; பச்சை நிற இரத்தினக்கற்களின் ஒளியானது அழகான மரநிழல் போன்று உள்ளது. இப்படியாக உள்ள நீ – சற்றும் இளைப்பாறாமல், உலக விஷயங்களில் மயங்குவது என்ற வழியில் நடக்கின்ற மனிதர்களின் சிரமத்தை நீக்கும் இடமாக உள்ளாய்.