Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 849)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ஆஸாத்ய கேகயஸுதா வரதாநமூலம் காலம் ப்ரதோஷம் அநிரீக்ஷ்ய ரமாஸஹாயம் மஞ்ஜுப்ரணாத ரஹிதா மணிபாதரக்ஷே மௌநவ்ரதம் கிமபி நூநம் அவர்த்தய: த்வம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! கைகேயிக்கு வரம் அளித்த காரணத்தினால் சீதையின் துணைவனான இராமனைக் காண இயலாமல் நீ இருந்தாய். அந்த நேரத்தில் உனது இனிமையான நாதங்களை எழுப்பாமல், மௌனமாக அமர்ந்துவிட்டாய். இப்படியாக எம்பெருமானை வணங்கக்கூடாது என்ற விதி கொண்ட ப்ரதோஷ காலத்தின் மௌன விரதம் பூண்டாய் போலும்.