Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 848)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

முக்தாமயூக ருசிராம் மணிபாதரக்ஷே மஞ்ஜுஸ்வநாம் மணிபி: ஆஹித வர்ணவர்க்காம் மந்யே முகுந்த பதபத்ம மதுவ்ரதீநாம் அந்யாம் அக்ருத்ரிமகிராம் அதிதேவதாம் த்வாம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்களின் ஒளியால் மிகவும் அழகாக உள்ளாய்; இனிமையான நாதங்கள் கொண்டவளாக உள்ளாய்; இரத்தினங்களால் உண்டாக்கப்படும் கருப்பு, சிகப்பு முதலான பல நிறங்களைக் கொண்டவளாக உள்ளாய். இப்படியாக உள்ள உன்னைக் காணும்போது - ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளை எப்போதும் மொய்த்தபடி உள்ள பெண் வண்டுகள் போன்றதும், யாராலும் செய்யப்படாததாக உள்ளதும் ஆகிய ச்ருதிகளின் அதிஷ்டான தேவதை என்று எண்ணுகிறேன்.