Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 847)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ஸம்பாவயந்தி கவயச் சதுர ப்ரசாராம் மஞ்ஜுஸ்வநாம் மஹித மௌக்திக பத்ரளா அங்கீம் ஸ்வாதீந ஸர்வபுவநாம் மணிபாதுகே த்வாம் ரங்காதிராஜ பத பங்கஜ ராஜஹம்ஸீம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நீ சீரிய நடையைக் கொண்டவளாகவும், இனிய நாதம் கொண்டவளாகவும், உயர்ந்த முத்துக்களால் வெண்மையான சிறகுகள் உடையவள் போன்றும், அனைத்து நீர் மற்றும் உலகங்களை வசப்படுத்தியவளாகவும் உள்ளாய். இப்படியாக உள்ள உன்னைக் காணும் நீரில் வாழ்கின்ற பறவைகள் அனைத்தும் உன்னை, ஸ்ரீரங்கநாஜனின் திருவடித் தாமரையில் எப்போதும் விளையாடுகின்ற பெண் ராஜஹம்ஸம் என்றே எண்ணுகின்றன.