Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 846)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
முக்தாம்சு கேஸரவதீ ஸ்திரவஜ்ர தம்ஷ்ட்ரா ப்ரஹ்லாத ஸம்பத் அநுரூப ஹிரண்யபேதா மூர்த்தி: ச்ரியோ பவஸி மாதவ பதரக்ஷே நாதஸ்ய நூநம் உசிதா நரஸிம்ஹ மூர்த்தே:
ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது சிங்கத்தின் பிடரிமுடி போன்று உள்ளது. உன்னில் பதிக்கப்பட்ட உறுதியான வைரங்கள், கோரைப்பற்கள் போன்று உள்ளன. உன்னில் உள்ள தங்கமயமான தன்மையானது, ப்ரஹ்லாதனின் பக்தி என்னும் செல்வமாக உள்ளது. இப்படியாக நரஸிம்ஹனாக நின்ற ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற பிராட்டி போன்று உனது திருமேனியைக் கொண்டவளாக உள்ளாய் போலும் (பாதுகையைப் பெண்சிங்கம் என்கிறார்).