Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 845)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ப்ரீதேந தேவி விபுநா ப்ரதிபாதநீயாம் பாதாவநி ப்ரதிபத உதித மஞ்ஜுநாதாம் வித்யாம் விதுர்பகவத: ப்ரதிபாதநார்ஹாம் பாராயணாகம பயோநிதி பாரகாஸ்த்வாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனால் மிகவும் மகிழ்வுடன் அடியார்களுக்கு அருளத் தக்கவளாகவும், ஒவ்வொரு அடிவைப்பிலும் இனிமையான வேத நாதத்துடன் கூடியவளாகவும், ஸ்ரீரங்கநாதனை எங்களுக்கு அளிக்கவல்லவளாகவும் நீ உள்ளாய். இப்படிப்பட்ட உன்னை வேத ஸமுத்திரங்களின் கரை கண்டவர்கள், வேதமாகவே அறிகின்றனர்.