Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 844)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ராமே வநம் தசரதே ச திவம் ப்ரயாதே நிர்தூத விச்வ திமிரா ஸஹஸா பபூவ பூயிஷ்ட ரத்ந கிரணா பவதி ரகூணாம் பூய: ப்ரதாப தபந உதய பூர்வஸந்த்யா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் கானகத்திற்கும், தசரதன் விண்ணிற்கும் சென்றபோது, இந்த உலகம் முழுவதும் இருண்டது. அப்போது உனது இரத்தினக் கற்களின் ஒளி மூலமாக, நீ மறுபடியும் ரகு வம்சத்து அரசர்களின் பராக்கிரமமாகிற சூரியன் உதிப்பதற்கு ஏற்ற காலை வேளையாக நின்றாய்.